தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

30 May 2026, 12:21 am
பயிர்க்கடன் தள்ளுபடி கோரி குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
<p><strong>பயிர்க்கடன் தள்ளுபடி கோரி குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு</strong></p><p>கள்ளக்குறிச்சி, மே 29- கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்து வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, வறட்சி மற்றும் இடுபொருள் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தமிழ்நாடு அரசு நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்கான உடனடி உறுதிமொழி கிடைக்காததால் ஆவேசமடைந்த விவசாயிகள், அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியபடி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றும் அதைக் ஏற்காத விவசாயிகள், ஆட்சியர் அலுவலக வாயிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டத் துணைச் செயலாளர் ஜி.அருள்தாஸ், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.ஜோதிராமன் மற்றும் உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.