பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
21 Jul 2026, 12:00 am

பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி,ஜூலை 20– தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளு படி செய்ய வலியு றுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கள்ளக் குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் திங்களன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம், நின்னையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் ஜி.அருள்தாஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செய லாளர் ஏ.வி. ஸ்டாலின்மணி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.பா. பெரியசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வி. ஏழு மலை, விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியத் தலைவர் ஆர். செல்வராஜ், நிர்வாகிகள் கே. கொளஞ்சி, என். கிருஷ்ணமூர்த்தி, ஏ.வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று மாவட்ட த்தின் பல முக்கிய இடங்க ளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்பாக விவசாயிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநாவலூர் ஆர். முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி. ஏழுமலை, ஒன்றியச் செய லாளர் எம்.வி. ஏழுமலை, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஜெ. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். களமருதூர் - டி. ஒரத்தூர் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எஸ். ஜோதிராமன் தலைமையில், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் அய்ய னார், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் கே. ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையில் போராட்டங்கள் நடை பெற்றன. சின்னசேலம் - நயி னார்பாளையம் ஒன்றியச் செயலாளர் சண்முகம் தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர் தெய்வீகன், சிபிஎம் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. அத்தியூர் ரிஷி வந்தியம் ஒன்றியம் அத்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பும் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்று சங்கத்தை முற்றுகை யிட்டனர்.