தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்குகவிவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

29 Oct 2026, 11:29 pm
வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை  கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்குகவிவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்குகவிவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, அக்.30-கள்ளக்குறிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் புதன்கிழமை (அக்.28 )நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை திட்டங்கள் குறித்த கையேடுகளை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ஏ.வி.ஸ்டாலின் மணி, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.ஜோதிராமன் ஆகியோர் வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்ட திட்டங்கள் குறித்த புத்தகத்தினை பெற்றுக் கொண்டனர்.

விவசாயிகள் கோரிக்கைகள்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து நிவாரணம்வழங்கவும், மக்காச்சோள விதை மானியத்தில் கொடுப்பதற்கு பதிலாக பின்னேற்பு மானியமாக வழங்கிடவும்,உளுந்தூர்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கூடுதல் கட்டிடம் அமைத்து தந்திடவும், மண்பரிசோதனை ஆய்வகம் அமைத்து தந்திடவும் வலியுறுத்தப்பட்டது.தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்கிடவும், கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகரும்பு அரவையை 1 மாதம் காலம் நீட்டிக்கவும், மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்புகாய்வதை தடுக்க வேறு ஆலைக்கு மாற்றி கரும்பு அரவை செய்திடவும், கரும்பு முத்தரப்பு கூட்டம் நடத்திடவும் வலியுறுத்தப்பட்டது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்தில் 1 இலட்சம் வரைபயிர் கடன் தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்திடவும், கால்நடைகளுக்கு நோய் தாக்குதலுக்கு தடுப்பூசிபோடவும் பாதூர் கிராமத்தில்வயல்வழிச்சாலை அமைத்து தந்திடவும், கொசப்பாடி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிடவும்,சாத்தனூர் வலதுபுற கால்வாயை தூர்வாரிடவும், சங்கராபுரம் ஆதிதிராவிடர் மக்களுக்குஇலவச வீட்டுமனை பட்டா வழங்கிடவும், சேஷசமுத்திரம், செங்காணம்கொல்லை, காடியார் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல்நிலையங்கள் அமைத்து தந்திடவும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.