கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
27 Jun 2026, 12:27 am

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி,ஜூன் 26- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று (ஜூன் 25) நடைபெற்றது.

விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினர். அவற்றின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

உரம் மற்றும் யூரி யாவைத் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மாவட்டத்தில் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஏரி, குளங்க ளில் உள்ள சீமைக் கரு வேல மரங்களை அகற்றி, ஆக்கிரமிப்புகளை நீக்கித் தூர்வார வேண்டும்; ஏரிக்கரைகளில் பனைமரக் கன்றுகளை நட வேண்டும். தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும். குறுவை நெல் கொள்முதல் நிலையம் மற்றும் மாடூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கிராமப் புறங்களில் உலர்க்களம், நயினார்பாளையத்தில் பயணியர் நிழற்குடை மற்றும் சேஷசமுத்திரத்தில் வாரச்சந்தை அமைக்க வேண்டும். தண்டலை - பாளையம் வயல்வெளி சாலை மற்றும் பொய்குணம் - அரசம்பட்டு சாலைகளைப் பிரதான சாலைகளுடன் இணைக்க வேண்டும்.

தாழ்வாக உள்ள மின்கம்பிகளைச் சரி செய்ய வேண்டும். பல்லகச்சேரியில் மாணவர்களுக்குப் பேருந்து வசதி மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்.

ஆட்சியரின் உறுதிமொழி

விவசாயிகளின் கோரிக் கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். முன்னதாக, இக்கூட்ட த்தில் பங்கேற்ற பயனாளி களுக்குக் குறுவைச் சிறப்புத் தொகுப்பு இடு பொருட்களை ஆட்சியர் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் பேபிகலா, துணை இயக்கு நர் ஜோதிபாசு, கச்சிராய பாளையம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அலுவலர் லதா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.