வணிக ரீதியாக தண்ணீர் எடுப்பதை மாவட்ட நிர்வாகம் தடைசெய்ய வேண்டும் ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
24 May 2026, 2:12 am
<p><strong>வணிக ரீதியாக தண்ணீர் எடுப்பதை மாவட்ட நிர்வாகம் தடைசெய்ய வேண்டும் ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>கள்ளக்குறிச்சி, மே 23- கடும் வறட்சியைச் சமாளிக்க 6 அம்சக் கோரிக்கைகள் உட்பட 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி தலைமை யில், மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.ஜோதிராமன், மாவட்டத் துணைச் செயலாளர் ஜி.அருள்தாஸ், விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வீரசோழபுரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இம்மனுவை வழங்கினர். மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள் வருமாறு. மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக் குறையைத் தடுக்க மின்மோட்டார்கள் மூலம் வணிக ரீதியாகத் தண்ணீர் எடுப்ப தைத் தடை செய்ய வேண்டும். புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், நிலுவையிலுள்ள கிணறுகளைத் தூர்வார வும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த மோட்டார்கள், மினி டேங்கு களைச் சீர்செய்து புதிய குடிநீர்க் குழாய்களை அமைக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடம்: கள்ளக்குறிச்சியில் புதிய ஆட்சியர் அலு வலகம் திறக்கப்பட்டுவிட்டதால், அதுவரை தற்காலிக ஆட்சியர் அலுவலகமாகச் செயல்பட்டு வந்த கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடத்தை, நெல் கொள்முதல் பணிகளுக்காக மீண்டும் விற்பனைக்கூட நிர்வாகத்திடமே முழுமையாக ஒப்படைக்க வேண்டும். சர்க்கரை ஆலைச் சாலை வசதி: செங்கல்ராயன் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு கொண்டு செல்லும் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் பரிந்தல் முதல் சிறுநாகலூர் சித்தேரி வரை 1 கி.மீ தார்ச்சாலை அமைக்க வேண்டும். மேலும், தியாகதுருகம் ஒன்றியம் சிறு நாகலூர் சித்தேரி சாலை புதுப்பித்தல், திருநாவலூர் ஒன்றியம் டி.ஓரத்தூர் முதல் களவானூர் வரையிலான சாலை, பாதூர் முதல் சேஷநதி வரையிலான சாலை மற்றும் ஆனைமடுவு குட்டையை ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, இக்கோரிக்கைகளின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலி யுறுத்தியுள்ளனர்.</p>
