தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வறட்சியை எதிர்கொள்ள சொட்டுநீர் பாசனத்தில் கள்ளக்குறிச்சி விவசாயிகள்

19 Jun 2026, 12:38 am
வறட்சியை எதிர்கொள்ள சொட்டுநீர்  பாசனத்தில் கள்ளக்குறிச்சி விவசாயிகள்
<p><strong>வறட்சியை எதிர்கொள்ள சொட்டுநீர் பாசனத்தில் கள்ளக்குறிச்சி விவசாயிகள்</strong></p><p>கள்ளக்குறிச்சி,ஜூன் 18- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சி மற்றும் நிலத்தடி நீர்மட்டக் குறைவு காரண மாக, விவசாயிகள் தண்ணீர் சிக்கனத்தைக் கடைப் பிடிக்கச் சொட்டுநீர் பாசன முறையைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கரும்பு, நெல், மக்காசோளம், மர வள்ளி, மஞ்சள், உளுந்து மற்றும் மணிலா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப் படுகின்றன. அணைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் கிணற்று நீர் பாசனமே இவர்களது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது நிலவும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருகிறது. இதனால் சாகு படி செய்துள்ள பயிர்களைக் காப்பாற்ற வும், தண்ணீர் பற்றாக் குறையைச் சமாளிக்கவும் விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையை நாடுகின்ற னர். குறிப்பாக, குதிரைச் சந்தல், நல்லாத்தூர், சடையம்பட்டு, காரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மணிலா மற்றும் மர வள்ளி சாகுபடியாளர்கள் சொட்டுநீர் பாசனத்தை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நவீன நீர்ப்பாசன முறை, குறைந்த நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்குப் பெரிதும் கைகொடுக்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.