சான்றிதழ் தராததால் ராணுவப் பணி கைநழுவும் அவலம்: குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
12 Jun 2026, 10:59 pm
<p><strong>சான்றிதழ் தராததால் ராணுவப் பணி கைநழுவும் அவலம்: குடும்பத்துடன் தர்ணா போராட்டம்</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 12- பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் ராணுவப் பணிக்குத் தேர்வான தன் மகன் வேலையில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாகனத்தை மறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மூங்கில்துறைப்பட்டு தேவி நகரைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் கல்லூரிப் படிப்பை முடித்து ராணுவப் பணிக்குத் தேர்வாகியுள்ளார். அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தும் கடந்த ஓராண்டாகப் பழங்குடி யின ஜாதிச் சான்றிதழ் வழங்காமல் வரு வாய்த்துறையினர் மெத்தனப் போக்குக் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மாரியின் குடும்பத்தினர், கோட்டாட்சியர் வாக னத்தின் முன்பாக அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தினர். எனினும், அதிகாரிகள் யாரும் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p>
