ஏமப்பேர் சாலையின் சித்தேரி கரையில் சுகாதாரச் சீர்கேடு!
13 Jul 2026, 12:58 am
<p><strong>ஏமப்பேர் சாலையின் சித்தேரி கரையில் சுகாதாரச் சீர்கேடு!</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 12- விளாந்தாங்கல் - ஏமப்பேர் சாலையில் உள்ள சித்தேரி கரையில் குப்பைகள் கொட்டப்படுவதால் கடும் சுகா தாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. காய்கறி மற்றும் இறைச்சிக் கழிவுகள் குவிக்கப்பட்டு, நாய்கள் கிளறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்க ளில் குப்பைகளுக்குத் தீ வைப்பதும் தொடர்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாகக் குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பை கள் கொட்டப்படாமல் தடுக்கக் கண்காணி ப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
