முந்தய பக்கம்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

24 Jun 2026, 11:46 pm
போதைப்பொருள்  ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
<p><strong>போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி</strong></p><p> கள்ளக்குறிச்சி, ஜூன் 24- கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா இன்று (ஜூன் 24) பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், “போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram