முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 231 தீக்கதிர் சந்தா

13 Aug 2026, 12:18 am
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 231 தீக்கதிர் சந்தா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 231 தீக்கதிர் சந்தா

கள்ளக்குறிச்சி, ஆக.12மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு சார்பில், ‘தீக்கதிர்’ சந்தா வழங்கும் விழா எலவனாசூர்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது.மாநிலக் குழு உறுப்பி னர் பி. சுகந்தியிடம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் இணைந்து 231 தீக்கதிர் சந்தாக்களுக்கான காசோலையை வழங்கினர்.முன்னதாக, விழாவிற்கு மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன்மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பி. சுகந்தி ஆகியோர் தீக்கதிர் முக்கியத்துவம் குறித்தும், அதன் பரவலைப்அதிகரிப்பதன் அவசியம்குறித்தும் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் கட்சியின்மாவட்டக்குழு உறுப்ப்பினர்கள், இடைக்குழுச் செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் திரளாகக் கலந்துகொண்டு சந்தாக்களை உற்சாகத்துடன் வழங்கினர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், டி. ஏழுமலை, பி. சுப்பிரமணியன், எம்.கே. பூவராகவன், எம். செந்தில், வே. ஏழுமலை, எம்.கே. பழனி, ஜெ. ஜெயக்குமார், இ. அலமேலு,வி. ரகுராமன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் கே. ஆனந்தராஜ், வேலா.பாலகிருஷ்ணன், சிவாஜி,வை. பழனி, பி. ஸ்டாலின்உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram