கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
15 Jul 2026, 1:27 am
<p><strong>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு</strong> </p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 14 – கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா கொடிய சைத்துத் தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியில், மாணவ-மாணவிகளும் அரசு அலுவலர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். இது குறித்துப் பேசிய ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா “மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்புப் பணிகள் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரையிலும், வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், பள்ளி மாண வர்களின் பங்களிப்போடு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப் படுகிறது.” பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிறைவடைந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கி யத்துவம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் ஆட்சியர் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் சி.முருகன் மற்றும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
