தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காப்புக்காட்டு சாலையை சீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்

30 Dec 2025, 5:57 pm
காப்புக்காட்டு சாலையை சீரமைக்க  கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்
<p><strong>காப்புக்காட்டு சாலையை சீரமைக்க &nbsp;கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்</strong></p> <p>கள்ளக்குறிச்சி, டிச.30 - கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்பியன் மாதேவி &nbsp;முதல்பொறைஅம்மன் கோவில் வரை உள்ள வன சரகத்திற்கு உட்பட்ட காப்பு காட்டின் வழியாக செல்லும் சாலையை சீரமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் &nbsp;முன்வந்துள்ளது. இந்த சாலையின் இரு புறமும் உள்ள முட் புதர்களை அகற்றி மேம்படுத்தி தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் முட்புதர்களை அகற்றிடவும் தார் சாலையின் இரு புறமும், நெடுஞ்சாலை துறை மூலம் மண்ணடித்துக்கொள்ள ஒப்புதல் அளித்து கடிதம் வழங்கினார். முட்புதர்கள் அகற்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம பொதுமக்களின் ஒத்துழைப்போடு இரு புறங்களிலும் இருந்த காட்டு முட்பு தர்களும் அதில் இருந்து செடி கொடிகளும் &nbsp;மரக்கன்றுகளுக்கும், வன உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அகற்றப்பட்டது. இதன் பின்னர் வாகனங்கள் எந்தவித சிரமமின்றி சென்று வருகின்றன. அதிகாரிகளுக்கு நன்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த மாவட்ட ஆட்சியர் , மாவட்ட வன அலுவலர், நெடுஞ்சாலை துறை அதிகாரி களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையின் இருபுறமும் தார் சாலை ஓரமாக &nbsp;நெடுஞ்சாலைத்துறை மண் நிரப்பிக்கொடுத்தால் வாகனங்களில் செல்லும் பொழுது எதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்கி செல்வதற்கும் விபத்துக் களை தடுப்பதற்கும் வசதியாக இருக்கும். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனே சாலையின் இரு புறங்களிலும் மண்ண டிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிபிஎம் கட்சியும், மனித உழைப்பும் முட்புதர்களை சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம்ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஏழுமலை,பி.சுப்பிரமணியன், மாவட்டக் குழு பி.மணி, வட்ட செயலாளர் வே.ஏழுமலை, உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன் ஆகியோர் பாராட்டினர். செம்பியன் மாதேவி கிளைச் செயலாளர் அர்ஜுனன்,சிறு நாகலூர் கிளைச் செயலாளர் அங்கமுத்து,கொட்டையூர் கிளைச் செயலாளர் சத்யராஜ் உள்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.