கள்ளக்குறிச்சியில் திஷா குழு கூட்டம்அதிமுக எம்எல்ஏ வெளிநடப்பு
30 Oct 2026, 11:49 pm

கள்ளக்குறிச்சியில் திஷா குழு கூட்டம்அதிமுக எம்எல்ஏ வெளிநடப்பு

கள்ளக்குறிச்சி,அக்.30- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (திஷா) கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெ.மலையரசன் தலைமையில் வெள்ளியன்று (அக்.30) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் துணைத் தலைவர் / விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் த.ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் ஜே.இ.பத்மஜா, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அருள், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் சந்தை, வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் கற்பிப்போம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், அஞ்சல் துறை திட்டங்கள் உள்ளிட்ட மொத்தம் 63 வகையான திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

எம்எல்ஏ வெளிநடப்பு

இக்கூட்டத்தில் பேசிய சங்கராபுரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ், ஆளுங்கட்சி தலையீடு இருக்காது என முதல்வர் தெரிவித்து வருகிறார். ஆனால் மாவட்ட செயலாளர் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்கின்றனர். அதிகாரிகள் ஆளுங்கட்சி நிர்வாகிகள் போல் செயல்படுகின்றனர்” எனக்கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.