தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

50 ஆண்டுகால தடையை உடைத்து பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி

6 Oct 2026, 10:28 pm
50 ஆண்டுகால தடையை உடைத்து பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி

50 ஆண்டுகால தடையை உடைத்து பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி

கள்ளக்குறிச்சி, அக்.6-கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே குரால் கிராமத்தில் 50 ஆண்டு களுக்கும் மேலாக மறுக்கப்பட்டு வந்தகோவில் நுழைவு உரிமையை பட்டியலின மக்கள் பெற்றுள்ளனர்.

குரால் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கலியுக ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்தனியார் இடத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப் பட்டது. ஆனால் பட்டியலின மக்கள்கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப் படாமல் வாசலில் நின்றே வழிபட்டு வந்தனர்.இந்நிலையில் அக்டோபர் 3, மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பட்டியலின மக்கள் மேள தாளங்களுடன்தாம்பூல தட்டு களில் பூசைப் பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போதுமாற்று சமூகத்தினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோவில் கதவை பூட்டியுள்ளனர். இதைக் கண்டித்து பட்டியலின மக்கள் கோவில் முன்பு தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் இ.ஷஹ்னாஸ், "கோவில் என்பது அனை வருக்கும் பொதுவானது. யாரும் தடைவிதிக்க முடியாது" எனஎடுத்துரைத்து, பூட்டை திறந்து பட்டியலின மக்களை உள்ளே அனுமதித்தார். 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தடை விதித்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், கிராமத்தில்தொடர் கண்காணிப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.