தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

19 Jun 2026, 1:15 am
சென்னை விரைவு செய்திகள்

கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கள்ளக்குறிச்சி, ஜூன் 18- கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலால், நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டலைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி நீதிமன்ற வளாகத்தில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர், மோப்ப நாய்களின் உதவியுடன் நீதிமன்ற அறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை முடியும் வரை நீதிமன்றப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜமாபந்தியில் விவசாயிடம் ரூ.8ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

விழுப்புரம், ஜூன் 18- வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், ஒட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரபு, தனது பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக ஒட்டை கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியை (45) அணுகியபோது, அவர் பட்டா மாற்றப் பரிந்துரை செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி, ரசாயனப் பொடி தடவிய பணத்துடன் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி பணியில் இருந்த கலைச்செல்வியிடம் பிரபு பணத்தை வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சப் பணத்துடன் கலைச்செல்வியை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: டி.எஸ்.பி. உத்தரவு

கள்ளக்குறிச்சி, ஜூன் 18- கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென டி.எஸ்.பி. மனோகரன் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்களைச் சாலையோரம் தாறுமாறாக நிறுத்துவது, கடைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் சாலையோரம் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் போன்றவற்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் பழைய பஸ் நிலையம், கச்சேரி சாலை மற்றும் நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சாலையோரங்களில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அகற்றவும், ஆக்கிரமிப்புகளைச் சரிசெய்யவும் டி.எஸ்.பி. மனோகரன் உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.