முந்தய பக்கம்

மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

14 Jul 2026, 1:15 am
மாவட்ட ஆட்சியரகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
<p><strong>மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்</strong> </p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 13- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நலத்திட்ட உதவிகள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 648 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தி உரிய தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக, ரூ.6.23 லட்சம் மதிப்பில் 8 இருக்கைகள் கொண்ட மின்சார வாகனம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram