தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்கம் வென்ற மாணவன் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பாராட்டு

3 Jul 2026, 11:24 pm
காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்கம் வென்ற  மாணவன் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பாராட்டு
<p><strong>காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்கம் வென்ற மாணவன் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பாராட்டு</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 3- இலங்கையில் நடை பெற்ற காமன்வெல்த் யூத் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவன் தமிழ் அமுதனை, மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா நேரில் சந்தித்து பாராட்டினார். இலங்கையில் மே 16 முதல் 26 வரை நடைபெற்ற காமன்வெல்த் யூத் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டி யில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் அமுதன் இந்திய அணிக்காக விளையாடி னார். இப்போட்டியில் அபாரமாகச் செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்ற அவர், மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாண வன் தமிழ் அமுதன், தனது பெற்றோர் மற்றும் பயிற்சி யாளர்களுடன் ஜூலை 2 ஆட்சியர் அலுவலகத்தில் ஜெ.இ.பத்மஜாவை நேரில் சந்தித்தார். மாணவனின் சாதனையைப் பாராட்டிய ஆட்சியர், அவருக்குச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், இதுபோன்று பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என மாணவனை ஊக்கு வித்தார். இந்நிகழ்வின் போது மாணவன் வென்ற கோப்பைகளும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனி ருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.