முந்தய பக்கம்

மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கிய ஆட்சியர் பத்மஜா

12 Jun 2026, 11:03 pm
மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கிய ஆட்சியர் பத்மஜா
<p><strong>மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கிய ஆட்சியர் பத்மஜா</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 12- கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்க ளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மற்றும் மாணவர் இடைநிற்றலைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 100% தேர்ச்சி தந்த பள்ளிகளுக்குப் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து, வருவாய் ஈட்டும் பெற்றோரை விபத்தில் இழந்த 10 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் கல்விப் பராமரிப்புச் செலவிற்காகத் தலா ரூ.75,000 வீதம் மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு வைப்புப் பத்திரங்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி செந்தில்குமார் பள்ளி நூலகங்களுக்காக வழங்கிய ரூ.30,000 மதிப்புள்ள புத்தகங்களையும் ஆட்சியர் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram