ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
28 Oct 2026, 11:14 pm
<p><strong>ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்</strong></p><p>கள்ளக்குறிச்சி, அக்.28-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குடிநீர் பயன்பாடு மற்றும் மின்கட்டண நிலுவைத் தொகைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு அனைத்துத் துறைகளும் தங்களுக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும், அத்தியாவசிய சேவைகளின் தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
