முந்தய பக்கம்

குழந்தை தொழிலாளர் முறை ஆட்சியர் தலைமையில் கூட்டம்

11 Oct 2026, 1:28 am
குழந்தை தொழிலாளர் முறை  ஆட்சியர் தலைமையில் கூட்டம்

குழந்தை தொழிலாளர் முறை ஆட்சியர் தலைமையில் கூட்டம்

கள்ளக்குறிச்சி, அக்.10-கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் வெள்ளியன்று (அக்.09) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதை தடுத்திட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரேனும் பணிக்கு அமர்த்தப்பட்டால் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986ன்படி அபராதம் (அ) சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க உரிய நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram