முந்தய பக்கம்

அரசு மகளிர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு!

8 Jul 2026, 1:31 am
அரசு மகளிர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு!

அரசு மகளிர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு!

கள்ளக்குறிச்சி, ஜூலை 7- கள்ளக்குறிச்சி ஒன்றியம், சிறுவத்தூரில் இயங்கி வரும் அரசு மாதிரி மகளிர் விடுதியில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு மற்றும் தங்கும் அறைகளின் நிலை குறித்து ஆட்சியர் விரிவாகக் கேட்டறிந்தார். விடுதி யின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்தும் அவர் தீவிரமாக ஆய்வு செய்தார். விடுதியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், அங்கு நிலவும் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனச் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மாணவிகளின் கல்வி மற்றும் பாது காப்பிற்கு எந்தவிதக் குறைவும் ஏற்படாதவாறு விடுதியை முறையாகப் பராமரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது, விடுதி கண்காணிப்பாளர் மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram