தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சியில் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

1 hour before
கள்ளக்குறிச்சியில் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
<p><strong>கள்ளக்குறிச்சியில் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை</strong></p><p>கள்ளக்குறிச்சி,ஜூலை 10- தமிழகத்தில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி. ஸ்டாலின்மணி தலைமையிலான குழுவினர், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே. மலையரசனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: “இந்தியாவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ், பீகார், மணிப்பூர் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே மத்திய தேசிய வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழகத்திலும் ஒரு மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைப்பது அவசியமாகும். தற்போதைய காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள், பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் நீர் பாசன மேலாண்மை குறித்த ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. மேலும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள, உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதி கொண்ட மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகம் கள்ளக்குறிச்சியில் அமைக்கப்பட வேண்டும்.” எனவே, இந்த நியாயமான கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டுக்கொண்டனர். இந்தச் சந்திப்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. ஏழுமலை, மாவட்டப் பொருளாளர் எம்.சி. ஆறுமுகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.