கள்ளக்குறிச்சியில் இளைஞர் மீது சாதிவெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
4 Oct 2026, 1:26 am

கள்ளக்குறிச்சியில் இளைஞர் மீது சாதிவெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

கள்ளக்குறிச்சி,அக். 3-கள்ளக்குறிச்சி வட்டம் நிறைமதி கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சாதிவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டித்துள்ளது.

நிறைமதி கிராமத்தில் 8 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் 6 வீடுகளில் நாயக்கர் சமூகத்தினரும், 2 வீடுகளில்அருந்ததியர் சமூகத்தின ரும் வசித்து வருகின்றனர். இதில் நாயக்கர் சமூ கத்தைச் சேர்ந்த ஜெய கிருஷ்ணன் என்பவர் வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார்.

கடந்த 27.09.2026 அன்று இரவு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மகேந்திரன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டி

லிருந்து புறப்பட்டு ஜெய கிருஷ்ணன் வீட்டு அருகே வந்தபோது, வளர்ப்பு நாய் குரைத்துக் கொண்டு கடிக்க விரட்டியுள்ளது. வாகனத்தை நிறுத்தி நாயை விரட்டிய மகேந்திரன், ஜெயகிருஷ்ணனிடம் நாய் கடிக்க வருவது குறித்து புகார் கூறியுள்ளார்.

அப்போது ஜெயகிருஷ்ணன், மகேந்திரனின் சாதியைப் பற்றி இழி வாகப் பேசி, தகாத வார்த்தை களால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், உருட்டுக் கட்டையால் மகேந்திரனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மகேந்திரனின் மண்டை உடைந்ததோடு, முகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஜெய கிருஷ்ணன் தனது உற

வினர்களான முருகன், ரமேஷ், பிரவீன், ரவிச் சந்திரன் ஆகியோரை போன் மூலம் அழைத்துள்ளார். அங்கு வந்த அவர்களும் சாதிப் பெயரைச் சொல்லி மகேந்திரனை கடுமையாக தாக்கியுள்ளனர். தலை, நெற்றி, கழுத்து, இடது கை, வலது கை, இடுப்பு பகுதி மற்றும் கால்கள் என 7 இடங்களில் மகேந்தி ரனுக்கு கொடுங்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சத்தம் கேட்டு ஓடி வந்த மகேந்திரனின் அண்ணி சித்ரா என்பவரையும் முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கி, "வீட்டை காலி செய்து ஓடி விடுங்கள்" என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

படுகாயமடைந்த மகேந்திரன் மற்றும் சித்ரா இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

சம்பவத்தை அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வே.ஏழுமலை, மாவட்ட துணைத் தலைவர் பி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. கொளஞ்சி, பி.ஏழுமலை, பரமசிவம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட வர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இச்சம்பவம் தொடர் பாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஜெய கிருஷ்ணனை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது.

அருந்ததியர் இளைஞர் மீது சாதி வெறித் தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டித்துள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனை

வரையும் கைது செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தீஒமு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் வே.ஏழுமலை, மாவட்டச் செயலாளர் டி.எஸ்.மோகன் ஆகியோர் கூறியதாவது:

மகேந்திரன் மற்றும் சித்ரா மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனை வரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அருந்ததியர் பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கொடுங்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மகேந்திரனுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.