200 நாள் வேலையும் ரூ.700 கூலியும் வழங்குக விதொச கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
9 Oct 2026, 1:32 am

200 நாள் வேலையும் ரூ.700 கூலியும் வழங்குக விதொச கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி,அக்.8-அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட 19-வது மாநாடு சங்கராபுரம் தாகப்பிள்ளை திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி தலை மையில் நடைபெற்ற இம்மாநாட்டில், மாவட்டத் துணைத் தலை வர் ஆர்.செல்வராசு கொடியேற்றினார். வரவேற்புக் குழு தலைவரும், ஒன்றியகவுன்சிலருமான ச.சசி குமார் வரவேற்புரை ஆற்ற, அகில இந்திய துணைத்தலைவரும் முன்னாள்சட்டமன்ற உறுப்பினரு மான ஏ.லாசர் துவக்க உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் பி.சுப்பிரமணி யன் வேலை அறிக்கையை யும், பொருளாளர் பி.பழனிவரவு செலவு அறிக்கையை யும் தாக்கல் செய்தனர். மாநில செயலாளர் வி.மாரியப்பன் மாநாட்டின்நிறைவுரையாற்றினார். மேலும், தவிச மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, சிஐடியு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்எம்.செந்தில் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தீர்மானங்கள்

கல்வராயன் மலைப் பகுதியில் விளையும் கடுக்காய் கொட்டையைபயன்படுத்தி தொழிற் சாலை அமைக்க வேண்டும்.மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு 4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், வீடில்லா ஏழை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், 60 வயது கடந்த விவசாயத் தொழிலாளர்களுக்குமாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், சங்கராபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமமருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

மாவட்டத் தலைவராக இ.அலமேலு, செயலாளராக வி.ஏழுமலை, பொருளாள ராக பி.பழனி உள்ளிட்ட 25 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவாக வரவேற்புக்குழு பொருளாளர் எஸ்.சிவாஜி நன்றி கூறினார்.