சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க கோரிக்கை
11 Jun 2026, 11:31 pm
<p><strong>சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க கோரிக்கை</strong></p><p>சங்கராபுரம், ஜூன் 11- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா அகரகோட்டாலம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சிதில மடைந்துள்ளதால், அதனை உடனடியாகச் சீரமைத்து குடிநீர் விநியோகத்தைச் சீராக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நீர்தேக்கத் தொட்டி நீண்ட காலமாகப் பராமரிப்பின்றிப் புறக்கணிக்கப்பட்டதால், அதன் கட்டு மானத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன், நீர் கசிவும் தீவிரமடைந்துள்ளது. இத னால் கட்டிடம் பலவீனமடைந்து, கிராம மக்களுக்குத் தேவையான சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோடைகாலங்களில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, இந்தத் தொட்டியைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டியது அவசியமாகிறது. தேவைப்பட்டால் இதன் கொள்ளளவை விரிவுபடுத்தி, கூடுதல் நீரைச் சேமித்து விநியோகிக்கவும் கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்த நீர்தேக்கத் தொட்டியை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்கள் கிராமத்தின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி, பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.</p>
