தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் போலீஸ் குடியிருப்பா? கள்ளக்குறிச்சியில் சாலை மறியல்

8 Oct 2026, 1:37 am
ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் போலீஸ் குடியிருப்பா? கள்ளக்குறிச்சியில் சாலை மறியல்

ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் போலீஸ் குடியிருப்பா? கள்ளக்குறிச்சியில் சாலை மறியல்

ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் போலீஸ் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து தியாகதுருகத்தில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,அக். 7- ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் போலீஸ் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து தியாகதுருகத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 107 ஆதி திராவிட பயனாளிகளுக்கு கடந்த 1996-ம் ஆண்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள மாரி யம்மன் கோயில் அருகே உள்ள அரசு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்ட போதிலும், அந்த இடத்தை அளவீடு செய்து பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்காமல் அதிகாரிகள் கால தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று (செவ்வாயன்று) திடீரென பொதுமக்களுக்கு பட்டா வழங்கிய அதே இடத்தில் காவலர் குடி யிருப்பு கட்டுவதற்கான அளவீடு செய்யும் பணியை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.

இதனை கண்டித்து சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து உடனடியாக தியாகதுருகம் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பட்டா வழங்கிய இடம் போக மீதமுள்ள இடத்தில் தான் காவலர் குடியிருப்பு கட்டப்பட உள்ளதாக விளக்கமளித்து பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.