களியங்காடு மேம்பாலத்தின் கீழ் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள்
19 May 2026, 10:03 pm
<p><strong>களியங்காடு மேம்பாலத்தின் கீழ் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் </strong></p><p>நாகர்கோவில்,மே 19- களியங்காடு மேம்பாலத் தில் கீழ் தேங்கும் மழை நீரால்பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்ற னர். உடனடியாக தேங்கிய நீரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர். குமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த களி யங்காடு பகுதியில் இருந்து இறச்சகுளம் செல்லும் பாதையில் மேம்பாலம் உள்ளது.இந்த பாலத்தின் அடியில் மழைநீர் அதிகள வில் தேங்குவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் கல்லூரி கள் உள்ளதால் மாணவ, மாணவிகள் செல்வதற்கு பெரும் அச்சப்படுகின்றனர். அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுத்து தேங்கிய நீரை அகற்ற வேண்டும். சாலையை சீர மைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
