முந்தய பக்கம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளி மாணவர்களுக்கு வண்ணச் சீருடை வழங்கல்

5 Oct 2026, 9:32 pm
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளி மாணவர்களுக்கு வண்ணச் சீருடை வழங்கல்
<p><strong>களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளி மாணவர்களுக்கு வண்ணச் சீருடை வழங்கல்</strong></p><p>குழித்துறை, அக். 5 -களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வண்ணச் சீருடைகள் திங்கள்கிழமைவழங்கப்பட்டன.</p><p>அரசுப் பள்ளி மாணவர்கள் புதன்கிழமை தோறும் தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை அணிந்து வரும் நோக்கில் வண்ணச் சீருடைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவுக்குபள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை ச. ரெஜினி,பள்ளி மேலாண்மைக் குழு தலைவி டென்சி,கிராம கல்விக் குழு தலைவர் சுரேஷ்குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை எஸ்.கே. லேகா வரவேற்றார்.விழாவில், களியக்காவிளை பேரூராட்சித் தலைவர் ஏ. சுரேஷ் சிறப்புஅழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு இலவச வண்ணச் சீருடைகள் வழங்கிப் பேசினார். களியக்காவிளை பேரூராட்சி வார்டு உறுப்பினர் மு.ரிபாய், ஆசிரியை பினி சந்திரா மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram