களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் விழா
15 Jul 2026, 10:41 pm
<p><strong>களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் விழா</strong></p><p>குழித்துறை, ஜுலை 15- குமரி மாவட்டம், களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டா டப்பட்டது. பள்ளி பெற்றோர்-ஆசிரியா் கழகத் தலைவா் மாகீன் அபுபக்கா் தலைமை வகித்தார். தலைமையாசிரியை ரெஜனி முன்னிலை வகித்தார். ஆசிரியை லேகா வர வேற்றார். காமராஜரின் சிறப்புகள் குறித்து களியக்கா விளை பேரூராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பேசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக காமராஜா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி நயிமா, கிராம கல்விக் குழுத் தலைவா் சுரேஷ்குமார், களியக்காவிளை பேரூராட்சி வார்டு உறுப்பினா் ரிபாய், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.</p>
