களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நவம்பருக்குள் முடித்திடுக! அதிகாரிகள்-ஒப்பந்ததாரர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
8 Jul 2026, 9:15 pm
<p><strong>களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நவம்பருக்குள் முடித்திடுக! அதிகாரிகள்-ஒப்பந்ததாரர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்</strong></p><p>நாகர்கோவில்,ஜூலை 8- கன்னியாகுமரி மாவட்ட பேரூ ராட்சிகள் துறை சார்பில் களியக்கா விளை தேர்வுநிலை பேரூராட்சிக் குட்பட்ட களியக்காவிளை பேருந்துநிலைய கட்டுமான பணி களை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஜூலை 8 அன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் கூறியதா வது: கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூ ராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்குட்பட்ட பகு திகளில் பொதுமக்களின் தேவைக ளுக்கு ஏற்ப பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக களி யக்காவிளையை சுற்றியுள்ள பொதுமக்கள், பயணிகள், வியா பாரிகள் உள்ளிட்டோர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறை வேற்றும் வகையில் களியக்கா விளை பிரதான சந்திப்பில் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சியின் சார்பில் ரூ.9.20 கோடி மதிப்பில் நவீன வசதி களுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணி கள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடை பெற்று வருகிறது. இப்பேருந்துநிலையத்தில் தரைத்தளத்தில் 4 கடைகளும், முதல்தளத்தில் 4 கடைகளும், இரண்டாம் தளத்தில் 3 கடை கள் மற்றும் உணவகமும் கட்டப் பட்டு வருகிறது. மேலும் அலுவல கங்கள், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக கழிப்பறைகள், கை கழுவும் இடம், சுகாதார பொருட் கள் வைக்கும் அறை, குடிநீர் வச திகள் என அடிப்படை வசதிக ளுடன் பேருந்துநிலையம் கட்டப் பட்டு வருகிறது. மேலும் இப்பேருந்து நிலை யத்தில் 150 க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து சென்று கொண்டிருந்தன. அதற்கு ஏற்ப கூடுதல் வசதிகளுடன் வடிவ மைத்திட ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பயணிகளுடன் காய்கறி சந்தைக்கு வருபவர்களும் அதிக அளவில் பேருந்து நிலையத்திற்கு வருகை புரிகின்றனர். பணியின் முன்னேற் றம் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை சமர்ப்பித்திட பேரூராட்சி உதவி இயக்குநருக்கு அறிவுறுத் தப்பட்டது. குறிப்பாக பணிகளை நவம்பர் மாதத்திற்குள் அனை த்து பணிகளையும் முடித்திட பேரூராட்சி உதவி இயக்குநர், செயற்பொறியாளர், பேரூ ராட்சி செயல் அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பளுகல் பேரூராட்சிக்குட்பட்ட பளுகல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ரம்ப சுகாதார நிலைய வளாகத் தில் ரூ.75 இலட்சம் மதிப்பில் புதி தாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரி வித்தார். இந்த ஆய்வில் உதவி இயக்கு நர் (பேரூராட்சிகள்) கோமதி, களியக்காவிளை பேரூராட்சி தலை வர் சுரேஷ், செயல் அலுவலர் சந்திரகலா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.</p>
