கலசப்பாக்கத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
17 Jul 2026, 11:59 pm
<p><strong>கலசப்பாக்கத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் </strong></p><p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளர்களுக்கு கண் விழிப் பதிவு எடுப்பதைத் தகுந்த காரணமின்றி கட்டாயமாக்குவதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.கே. வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் விளக்கி முறையிட்டனர்.</p>
