கலசலிங்கம் பல்கலையில் 80-வது சுதந்திர தின விழா
16 Aug 2026, 9:54 pm

கலசலிங்கம் பல்கலையில் 80-வது சுதந்திர தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.16-ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைத்தலைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமை வகித்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.நாராயணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, என்.சி.சி. மாணவர்களின்அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பதிவாளர் வி.வாசுதேவன் மற்றும் கலசலிங்கம் கல்விக் குழும முதல்வர்கள் முன் னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இயக்குநர்கள், டீன்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், தொழில்நுட்பப் பணியாளர் கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.