தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

களாம்பாக்கத்தில் இருளர் இன மக்கள் சாலை மீட்பு: மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு வெற்றி!

31 May 2026, 11:26 pm
களாம்பாக்கத்தில் இருளர் இன மக்கள் சாலை மீட்பு: மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு வெற்றி!
<p><strong>களாம்பாக்கத்தில் இருளர் இன மக்கள் சாலை மீட்பு: மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு வெற்றி!</strong></p><p>திருவள்ளூர்,மே 31- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த களாம்பாக்கத்தில், பழங்குடி இருளர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குச் செல்லும் 500 மீட்டர் அரசு மெட்டல் சாலை யைத் தனிநபர் ஒருவர் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி, விவசாய நிலமாக மாற்றி ஆக்கிரமித்தார். வருவாய்த்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்காததால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஜூன் 1 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவிக்கப் பட்டது. இதையடுத்து, திருத்தணி வட்டாட்சியர் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிக்கப் பட்ட சாலையை மீட்டதோடு, 20 குடும்பங்க ளுக்கான பழைய பட்டாக்களைக் கணினி பட்டாக்களாக மாற்றவும் உறுதியளித்தார். இதனால், மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு தலைமையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. இதுகுறித்துச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு, மீட்கப்பட்ட பாதையில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், பட்டாக்களைக் கிராமக் கணக்கில் பதிவேற்ற வேண்டும், ஆக்கிரமிப் பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் பி. அற்புதம், சின்னராசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அஜித், மாலாமற்றும் பலர் கலந்து கொண்டனர். சாலையை மீட்டெடுத்த சங்கத்தினருக்கு இருளர் இன மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.