கனவாகப் போகுமோ கலைஞர் கனவு இல்லம்? நம்பி வீடு கட்டியவர்கள் நிதியுதவி வராததால் அதிர்ச்சி
21 May 2026, 11:01 pm

கனவாகப் போகுமோ கலைஞர் கனவு இல்லம்? நம்பி வீடு கட்டியவர்கள் நிதியுதவி வராததால் அதிர்ச்சி

திருப்பூர், மே 21 – திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டத் தொடங்கியவர் களுக்கு, இத்திட்ட நிதியுதவி கிடைக்க வில்லை எனக் கூறுகின்றனர்.

குடியிருந்த அரைகுறை குடிசை வீட்டை அகற்றிவிட்டு கலைஞர் கனவு இல்லத்தில் காங்கிரீட் வீடு கட்டிக் கொள்ளலாம் என நம்பியவர்கள், தற்போது நிதி கிடைக்காததால் வீடு கட்டுவது கனவாகவே போய்விடுமோ என அச்சப்படுகின்றனர்.

விதிகள் என்ன? 2030ஆம் ஆண்டு குடிசைகள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்குடன் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தைக் கடந்த 2024 – 25 நிதியாண்டில் திமுக அரசு அறிவித்தது.

முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகளுக்கு ரூ.3100 கோடி ஒதுக்கீடு செய்தது. குறைந்தபட்சம் 300 சதுர அடி காங்கிரீட் மேற்கூரையுடன் 360 சதுரடி வீடு கட்டிக் கொள்ளலாம்.

வீடு ஒன்றிற்கு தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

இந்த தொகை பய னாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடி யாக வரவு வைக்கப்படும் என திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

. அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலம் பட்டா இடம் உள்ள, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கலைஞர் கனவு இல்லம் கட்ட அனுமதிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 70, 80 வீடுகள் வீதம் கட்டப்பட்டு வருகிறது. வட்டிக்கு கடன் வாங்கி..

பட்டா இடம் இருந்து சரியான கட்டிடம் இல்லாமல் குடிசை, அரைகுறை மண் கட்டிடமாக வைத்திருந்தவர்கள் இத்திட்ட த்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடன் வீடு கட்டத் தொடங்கினர்.

அருகாமையில் தற்காலிக மாக வாடகைக்குக் குடியேறி, தாங்கள் இருந்த வீட்டை இடித்து அகற்றிவிட்டு கட்டுமானப் பணியத் தொடங்கினர்.

ஒவ்வொருவரும் அடித்தளம் (பேஸ் மெண்ட்) முதல் சுற்றுச்சுவர், லிண்டல் வரை என கட்டுமானப் பணி செய்துள்ள னர்.

சிலர் காங்கிரீட் மேற்கூரை அமைப் பது வரை பணியைச் செய்துள்ளனர்.

கலைஞர் கனவு இல்ல நிதி வந்து விடும் என்ற நம்பிக்கையில், ஏற்கெனவே இருந்த சேமித்து வைத்த பணத்தில் இருந்தும், வட்டிக்குக் கடன் பெற்றும் இப்பணியை மேற்கொண்டுள்ளதாக பயனாளிகள் தெரிவித்தனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே இந்த பணிகள் நடைபெற்று, இந்த விப ரங்களை ஊராட்சி ஒன்றிய அதிகாரி களுக்கு புகைப்படத்துடன் கட்டுமான விப ரத்தை வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.

எனினும் பயனாளி களுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்ட த்தில் நிதியுதவி இதுவரை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து சில பயனாளிகள் அதி காரிகளைத் தொடர்பு கொண்டபோது, இந்த திட்டத்திற்கென தனி செயலி உரு வாக்கப்பட்டுள்ளது.

அதில் பயனாளிகள், கட்டுமான விபரங்களை பதிவேற்றம் செய்தால் ஒப்புதல் கிடைத்து பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப் படும், அதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

நிதி கிடைக்குமா? எனினும் கடந்த மார்ச் மாதம் கடைசியிலேயே முதல்கட்டப் பணிகளை முடித்தவர்களுக்கு இன்றைய தேதி வரை பணம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். தொடர்ந்து இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, கலைஞர் கனவு இல்லத்திற்கான செயலி தற்போது செயல்படவில்லை என்று தெரிவித்ததாக அதிர்ச்சியுடன் கூறினர்.

இதனால் கலைஞர் கனவு இல்லத் திட்ட நிதி கிடைக்குமா என்ற ஐயத்தில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

ஏற்கெனவே இருந்த வீட்டையும் அகற்றி, இருந்த பணத்தையும் செலவு செய்து கட்டுமானப் பணியைத் தொடங்கி விட்டோம், தற்போது வாடகை வீட்டில் இருக்கிறோம்.

அரசு நிதியுதவி கிடைக்கா விட்டால் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை யும் முழுமையாக கட்டி முடிக்க முடியாது, ஆனால் அதிகாரிகள் சட்டமன்றத் தேர்த லுக்கு முன்பிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக பணம் அனுப்பாமல் இருக்கின்றனர்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை, கடனும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று வேதனையுடன் கூறினர்.

இது குறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரைத் தொடர்பு கொண்டபோது, அவரது நேர்முக உத வியாளர் பேசினார்.

கலைஞர் கனவு இல்லம் திட்ட நிதி கிடைக்கவில்லை என்று பயனாளிகள் சொன்னதைப் பற்றி கேட்ட போது இதுவரை அந்த திட்டத்திற்குரிய நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை என்றார். இந்த திட்ட நிதி ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை நான்கு தவணைகளாக விடுவிப்பார்கள்.

எனினும் முதல் தவ ணை நிதி கூட தரப்படவில்லை என்று பய னாளிகள் கூறியதைப் பற்றி கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை.

வேலை செய்த நிலைக்கு ஏற்ப பணம் அனுப்பி வை க்கப்படுகிறது என்று மறுப்புத் தெரிவித்தார்.

அதேபோல் வட்டார வளர்ச்சி அலுவ லர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போதும், அந்தந்த வட்டாரத்தில் கலைஞர் கனவு இல்லத் திட்ட நிதி அனுப்பப்பட்டு விட்டது என்று தெரிவித்தனர்.

எதிர்பார்ப்பு எனினும் பல்லடம், உடுமலை, ஊத்துக்குளி, காங்கேயம் என பல வட்டா ரங்களிலும் இந்த திட்ட நிதி பயனாளி களுக்கு கிடைக்கவில்லை.

எனவே வீடு கட்டி முடிக்க முடியுமா என்ற கலக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வேதனை யுடன் உள்ளனர்.

மேலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இத்திட்டத்தை நிறுத்தி விட்டார்களோ என்றும் சிலர் சந்தேகப் படுகின்றனர்.

எனவே தமிழக அரசு இப்பிரச்சனை யில் கவனம் செலுத்தி, உண்மை நிலை அறிந்து கலைஞர் கனவு இல்ல திட்டபயனாளிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடுகிடைப்பதற்கும், வீடுகளை முழுமையாகக் கட்டி முடித்து குடியேறுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர். (ந.நி.)