வீடில்லாதோருக்கு கலைஞர் கனவு இல்லம்; மலைக்கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ்!
12 Apr 2026, 5:30 am

வீடில்லாதோருக்கு கலைஞர் கனவு இல்லம்; மலைக்கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ்!

அமைச்சர் ஐ.பெரியசாமி வாக்குறுதி. சின்னமனூர், ஏப்.11- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சின்னமனூர் அருகே ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள மலைக்கிராமங்களில் ஐ.பெரியசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் பொதுமக்களிடம் உரையாற்றிய அவர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.

வீடற்றோருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் கொடுக்கப்படும். மலைப் பகுதிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படும், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.