தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலடி சங்கராச்சார்யா பல்கலைக்கழக மாணவர் போராட்டமும் கேரளப் பொதுச் சமூகமும் - நாடகம் நடத்தியது குற்றமா? - தே. சைலஸ் அருள்ராஜ்

4 hours before
காலடி சங்கராச்சார்யா பல்கலைக்கழக மாணவர் போராட்டமும் கேரளப் பொதுச் சமூகமும் -  நாடகம்  நடத்தியது குற்றமா? - தே. சைலஸ் அருள்ராஜ்

காலடி சங்கராச்சார்யா பல்கலைக்கழக மாணவர் போராட்டமும் கேரளப் பொதுச் சமூகமும் - நாடகம்

நடத்தியது குற்றமா? - தே. சைலஸ் அருள்ராஜ்

உலகெங்கும் கலை பல சக்திவாய்ந்த சமூக மாற்றங் களையும் அரசியல் விவாதங்களையும் உருவாக்கி யிருக்கிறது. காலனிய, அரைக்காலனிய நாடு களின் விடுதலைப் போராட்டங்களில் மக்களைத் திரட்டும் ஆயுதமாக நாடகம் விளங்கியது. அதனால்தான் காலனிய காலம் முதல் செயற்கை நுண்ணறிவுக் காலம் வரை ஆட்சியாளர்கள் கலைத்துறை மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்துகின்றனர். குஜராத் வன்முறை குறித்த பிபிசிஆவணப்படத்தை மோடி அரசு தடை செய்தது. 1989-ல் உத்தரப் பிரதேசத்தில்“ஹல்லா போல்” நாடகம் நடத்திக்கொண்டி ருந்த சப்தர் ஹஷ்மியைக் யுடிஎப் குண்டர்கள்

அடித்தே கொன்றனர். இன்று, பல்கலைக்கழ கத்தில் அடிப்படை வசதி கேட்டு நாடகம் நடத்திய மாணவர்களைக்கேரளத்தின் யுடிஎப் அரசு பழிவாங்குகிறது.எர்ணாகுளம் மாவட்டம் காலடியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், இந்திய மொழிகள், பண்பாடு,தத்துவம் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாகக் கற்பிக்கும் மாநிலப் பல்கலைக்கழகம். அங்கு ஒரு நாடகம் நடத்தியதற்காக 16 மாணவர்கள் காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து நீதிக்காகவும் கல்விச் சுதந்திரத்துக்காகவும் 100 நாட்களைக் கடந்து வளாகத்தில்மாணவர்கள் போராடி வருகின்றனர். பத்து நாட்களாகத் தொடரும் உண்ணாவிரதம் கேரளப் பொதுச்சமூகத்தைக்கொதித்தெழச் செய்துள்ளது.

“ஒளியின் மரணம்”

வளாகத்தில் மின்விளக்குகள் முறையாக எரிவதில்லை; இரவில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றுஇந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவர்கள் நிர்வாகத்திடம் புகாரளித்தனர். நிர்வாகம் அலட்சியம் காட்டியது. ஆகஸ்ட் 13 அன்று பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு (சிண்டிகேட்) கூட்டம்நடந்தபோது, இந்தப் பிரச்சனைக்கு முன்னுரிமை கோரி, பழுதான மின்விளக்குகளுக்கும் கம்பங்களுக்கும் இறுதிச்சடங்கு நடத்துவது போன்ற “ஒளியின்மரணம்” என்ற நாடகத்தை மாணவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டமாக நடத்தினர். அது கேரளம் முழுவதும்பேசப்பட்டது.

பொய்க் குற்றச்சாட்டு, பழிவாங்கல்

போராடிய மாணவர்கள் தன்னையும் சிண்டிvகேட் உறுப்பினர்களையும் தாக்கியதாகவும், பெண் துணைவேந்தரான தன்னை இழிவுபடுத்தியதாகவும் கூறி,துணைவேந்தர் சிசா தாமஸ் 16 மாணவர்களை இடைநீக்கம்செய்தார். குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை யை விசாரிக்க வேண்டிய சிண்டிகேட், அவரது பொய்க்குற்றச்சாட்டுக்குத் துணை நின்றது. அன்றைய போராட்டத்தைப் பதிவு செய்த ஊடகக் காட்சிகள் எதிலும்,மாணவர்கள் துணைவேந்தரை இழிவுபடுத்தியதாக இல்லை. ஆனாலும் பல்கலைக்கழக நிர்வாகமும், உயர்கல்வித்துறையும், மாநில அரசும் துணைவேந்தர் பக்கம் நின்று மாணவர்களைச் சித்தாந்த ரீதியாகப் பழிவாங்குகின்றன.இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் கல்வியிலும் கலையிலும் சிறந்தவர்கள். ரித்திஷா, மாநிலத்தின் முதல் திருநங்கை முனைவர் பட்டஆய்வாளர்; நாட்டின் உயரிய ஜேஆர்எப் உதவித்தொகையில் ஆய்வு செய்கிறார். அருணிமா நாட்டியத்திலும்,ஷ்யாம்ஜித் மௌன நாடகத்திலும், சிவா, ஜிஷ்ணு ஆகியோர் நாடகத்திலும் மாநில அளவில் முதல் பரிசு வென்றவர்கள். கல்வியிலும் கலையிலும் மிளிரும் இந்த மாணவர்கள் மீதுதான் ஆதாரமற்றபொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போராடுவது அரசமைப்புக்கு விரோதமா?

நவம்பரில் தொடங்கிய பருவத்தேர்வுக்கு 16 மாணவர்களும் விண்ணப்பித்தபோது, எந்த உத்தரவும் இல்லாமல் நிர்வாகம் நிராகரித்தது. மாணவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். நீண்டகால இடைநீக்கத்தின் பெயரில்

கல்வியைப் பறிக்கக் கூடாது என்று கூறி, தேர்வெழுத அனுமதிக்குமாறு தனிநீதிபதி உத்தரவிட்டார். அதை எதிர்த்துத் துணைவேந்தரே இருநீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தார். மாணவர்களைத் தேர்வெழுத அனுமதிக்க முடியாது என்று ஒரு துணைஇருநீதிபதி அமர்வு மாணவர்களின் கோரிக்கையைநிராகரித்தது. கல்வி வளாகங்களில் உண்ணாவிரதம், தர்ணா போன்ற போராட்டங்கள் அரசமைப்புக்குவிரோதமானவை என்றும் கருத்துத் தெரிவித்தது. சங்கம் அமைக்கும் உரிமையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(சி) வழங்கியுள்ள நிலையில் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் முன்வரிசையில் நின்ற மாணவர் களையும், தர்ணா, சட்டமறுப்பு, உண்ணா நோன்பு எனப் போராடியகாந்தியடிகளின் அகிம்சைப் பாதையையும் அரசமைப்பு விரோதம் என்பது காலத்தின் முரண்.மாணவர்களுக்கு 85 சதவீத வருகைப்பதிவு இருப்பதை மறைத்து, நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் தவறானதகவல் அளித்தது. நான்கு பேர் தவிர மற்ற 12 பேர், பெற்றோரின் விளக்கக் கடிதத்தோடு மன்னிப்புக் கேட்டால்தேர்வெழுத அனுமதிப்பதாகவும் தெரிவித்தது. மன்னிப்புக் கேட்க மறுத்த மாணவர்கள் காலவரையற்றஉண்ணாவிரதத்தைத் தொடங்கினர். மேல்முறையீட்டில் தேர்வெழுத அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவையும் பின்பற்ற நிர்வாகம் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண வேண்டியமாநில அரசும் உயர்கல்வித் துறையும், துணைவேந்தரின் எதேச்சதிகார நடவடிக்கைக்குத் துணைபோயுள்ளன.

ஏபிவிபிக்குக் கரிசனம், எஸ்எப்ஐக்குப் பழிவாங்கல்

உயர்கல்வித் துறை அமைச்சர் ரோஜி எம்.ஜான், மன்னிப்புக் கேட்பதே பொருத்தம் என்று துணைவேந்தரின் ஊதுகுழலாகப் பேசி வருகிறார். செய்தியாளர் சந்திப்பில்முதலமைச்சர் வி.டி. சதீசனும் பல்கலைக்கழகத்தின் நிலையை நியாயப்படுத்தி னார். முன்பு இதேபோல் ஒரு மாணவர் நீண்டகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டு, இறுதியில் வெளியேற்றப்பட்டதையும் உதாரணம் காட்டினார். ஆனால் அந்தமாணவர், காங்கிரஸ் மாணவர் தலைவர் ஒருவரைக் கொலைவெறியோடு தாக்கியதற்காக நடவடிக்கைக்கு உள்ளான ஆர்எஸ்எஸ்ஸின் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்.சொந்தக் கட்சி மாணவர் தலைவரைத் தாக்கியவரோடு, நாடகம் நடத்திய மாணவர்களை ஒப்பிட்டதுசர்ச்சையானது. எஸ்எப்ஐ சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காகவே, ஆர்எஸ்எஸ்–பாஜக பாணியைக்காங்கிரஸ் அரசு பின்பற்றுகிறது.

“இவர்கள் சாவர்க்கர் அல்ல”

மாணவர்களின் போராட்டத்துக்குக் கேரளப் பொதுச்சமூகமும் குடிமைச் சமூகமும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. போராட்டப் பந்தலுக்கே வந்த திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ், “இவர்கள் மாணவர்கள்; சாவர்க்கர் அல்ல. மன்னிப்புக் கேட்கச் சொல்லாதீர்கள். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நானும் உண்ணாவிரதம் இருப்பேன்” என்று எச்சரித்தார். நாஜிஜெர்மனியின் பல்கலைக்கழகங்களில் முற்போக்கு, மார்க்சிய மாணவர்களைப் படிக்கவும் தேர்வெழுதவும்விடாமல் செய்ததையே, துணைவேந்தரும் காங்கிரஸ் அரசும் கேரளத்தில் செய்வதாக மலையாள எழுத்தாளர்என்.எஸ். மாதவன் கடுமையாகச் சாடியுள்ளார். மாணவர் சங்கமும் வாலிபர் சங்கமும் களத்தில் உடன்நிற்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் நடவடிக்கைக் குழு அமைத்து, மாநிலம் முழுவதும் எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள் பங்கேற்ற கலை வடிவ ஒருமைப்பாட்டுநிகழ்ச்சிகளை நடத்தியது. இந்த நாட்டின் உயிர்நாடியான ஜனநாயக உரிமைகளைக் காக்கப் போராடும் மாணவர்கள் மீதுதுணைவேந்தர் நடத்தும் எதேச்சதிகாரத்துக்கும், கேரள காங்கிரஸ் கூட்டணி அரசின் அரசியல் பழிவாங்கலுக்கும்எதிராக அனைவரும் குரலெழுப்ப வேண்டிய தருணம் இது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.