வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி கஜாரியா டைல்ஸ் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் மே தின எழுச்சி
8 Jun 2026, 9:30 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி கஜாரியா டைல்ஸ் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் மே தின எழுச்சி

கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக ஒரு மாத காலம் நீடித்த போராட்டம்

வேலைநிறுத்தம் 54

தாபுகாரா, ஜூன் 8- “கஜாரியா நிறுவனத்தின் வாயிலில் மே தினத்தில் தொடங்கிய தொழிலாளர்களின் தர்ணா போராட்டம், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும். தொழிலாளர்களுக்கு எதிரான அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!” - ராஜஸ்தான் மாநிலம் பிவாடி தொழிற்பேட்டையின் தாபுகாரா-கெய்ல்பூர் (Tapukara-Gailpur) பகுதியில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய டைல்ஸ் உற்பத்தி நிறுவனமான ‘கஜாரியா செராமிக்ஸ்’ (Kajaria Ceramics) ஆலை வாயிலில் மே தினத்தில் வெடித்த தொழிலாளர் வர்க்கப் போராட்டம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான களப் பதிவுகள் இடிமுழக்கமாய் ஒலிக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் பிவாடி தொழில் வழித்தடம் முழுவதும் பரவிய ஊதியப் போராட்டங்களின் தொடர்ச்சியாக, மே மாதத்தை உலுக்கிய இந்த மாபெரும் தர்ணா, கார்ப்பரேட் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு 87.8 மில்லியன் சதுர மீட்டர் உற்பத்தித் திறன் கொண்ட இந்த பிரம்மாண்ட ஆலையின் பெரும்பாலான பிரிவுகள் தானியங்கி மயமாக்கப்பட்டு, வெறும் 350 நிரந்தர ஊழியர்களை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால், உற்பத்தி, கையாளுதல் மற்றும் ஏற்றுமதி போன்ற கடுமையான உழைப்புப் பிரிவுகளில் எவ்வித பணிப் பாதுகாப்பும் இன்றி 800-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் அப்பட்டமாகச் சுரண்டப்பட்டு வருகின்றனர்.

மே தினத்தில் வெடித்த ஆவேசமும் அண்டை ஆலைகளின் உத்வேகமும்

விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான பணவீக்கத்திற்கு இணையாக மாதக் குறைந்தபட்ச ஊதியத்தை ₹20,000 ஆக உயர்த்தக் கோரி, அண்டை ஆலைகளான பெஸ்டெக், மதர்சன் தொழிலாளர்கள் நடத்திய வெற்றிகரமான போராட்டங்கள் கஜாரியா தொழிலாளர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்தன. வழக்கம் போல இடதுசாரி அமைப்புகளின் மே தினப் பேரணிகள் ஒருபுறம் நடக்க, கஜாரியா ஆலை வாயிலோ தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டக் களமாக மாறியது. போராட்டத்தில் பங்கேற்ற மன்னேஷ் என்ற தொழிலாளி ஊடகங்களிடம் பேசுகையில்: “நாங்கள் தினசரி 8 மணி நேரம் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், அரசு நிர்ணயித்துள்ள நியாயமான குறைந்தபட்சக் கூலி எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. சட்டப்படியான அந்த ஊதிய விகிதத்தை உடனடியாக உயர்த்தித் தர வேண்டும். அதற்காகவே இந்த ஆலையை முடக்கிப் போராடுகிறோம்” என்றார். மற்றொரு தொழிலாளி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகையில், “நாங்கள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை இந்த ஆலையில் எங்களின் ஆயுளைத் தொலைத்து உழைத்து வருகிறோம். ஆனால், ஊதிய உயர்வில் நிர்வாகம் எங்களைத் தொடர்ந்து வஞ்சிக்கிறது. அரசு விதிகளின்படி நியாயமான ஊதிய உயர்வை வழங்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்று முழங்கினார். இவ்வாலையில் முறையான தொழிற்சங்கம் இல்லாத நிலையிலும், தொழிலாளர்கள் தன்னிச்சையாகவும் வர்க்க ஒருமைப்பாட்டுடனும் அணிதிரண்டனர்.

காவல்துறை ஒடுக்குமுறையும் ‘ரோலிங் தர்ணா’ உத்தியும்

தொழிலாளர்களின் எழுச்சியை ஒடுக்க பிவாடி மற்றும் நொய்டா தொழில் மண்டலங்கள் முழுவதும் ட்ரோன் கேமரா கண்காணிப்புடன் பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டு, பிராந்தியமே ராணுவக் கண்டோன்மென்ட் போல மாற்றப்பட்டது. ஆலைக்குள் நிரந்தர ஊழியர்களைக் கொண்டு உற்பத்தியைத் தொடர நிர்வாகம் முயன்ற போதிலும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆலை வாயிலை முற்றுகையிட்டுத் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 1 முதல் தொடங்கி, மே 15-17 மற்றும் மே 19-22 எனப் பல கட்டங்களாக மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்த இந்தத் தொடர் போராட்டம், நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியைப் பற்றிக்கொண்டது.

நிர்வாகத் தலைமை மாற்றம்: தொழிலாளர் வர்க்கத்தின் மறைமுக வெற்றி

இப்போராட்டத்தின் நேரடி விளைவாக, மே 26 அன்று ஆலையின் செயல்பாட்டுத் தலைமை அதிகாரியாக இருந்தவர் அதிரடியாகப் பதவி விலக நேரிட்டது. அவருக்குப் பதிலாகப் புதிய செயல்பாட்டுத் தலைவர் நியமிக்கப்பட்டார். தொழிலாளர்களின் நீண்ட நாள் போராட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகத்தின் பலவீனத்தையே இந்தத் தலைமை மாற்றம் காட்டுகிறது. முறையான எழுத்துப்பூர்வ உடன்பாடுகள் பொதுவெளியில் அறிவிக்கப்படாவிட்டாலும், உற்பத்திப் பாதிப்பைத் தவிர்க்க நிர்வாகம் ரகசியப் பேச்சுவார்த்தைகள் மூலம் பகுதி அளவிலான ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. கார்ப்பரேட் சுரண்டலையும், காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி, உழைக்கும் வர்க்கம் தங்களின் கூட்டுப் போராட்ட வலிமையால் அதிகார வர்க்கத்தை பணிய வைக்க முடியும் என்பதை கஜாரியா தொழிலாளர்களின் இந்த ஒரு மாத காலப் போராட்டம் நிரூபித்துள்ளது. தி லெப்ட் வியூஸ்