தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

'கஃபாலா' முறையை தகர்க்க வேண்டியது கட்டாயம்! - ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

19 Mar 2026, 10:18 am
'கஃபாலா' முறையை தகர்க்க வேண்டியது கட்டாயம்! - ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள இந்தியர்களை பாதுகாக்க வெறும் மீட்பு நடவடிக்கைகளை (Evacuation Operations) மட்டும் மேற்கொள்வது போதாது; அவர்களின் அடிமைத்தனத்திற்கு மூலக் காரணமாக இருக்கும் 'கஃபாலா' முறையைத் தூதரக ரீதியாகத் தகர்க்க வேண்டியது கட்டாயம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசை வலியுறுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஜெனீவாவில் தற்போது (2026 பிப்ரவரி 23 - மார்ச் 31) நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 61-ஆவது கூட்டத்தொடரில், புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் சுமார் 3.1 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி 'புலம்பெயர்ந்தோருக்கான தொழிலாளர் நீதி கூட்டணி' (Coalition on Labor Justice for Migrants) ஜெனீவாவில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், தொழிலாளர்களை அவர்களின் முதலாளிகளுடன் சட்டப்பூர்வமாகக் கட்டிப்போடும் 'கஃபாலா' முறையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், வெளியேறும் அனுமதி (Exit Permit) மற்றும் Tied Visas முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் சமர்ப்பித்த இந்த அறிக்கையில், புலம்பெயர் தொழிலாளர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்வது மற்றும் அவர்களைத் தன்னிச்சையாகக் கைது செய்வது போன்றவை சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை அமைப்புகள் கஃபாலா முறையை 'நவீன கால அடிமைத்தனம்' என்று வர்ணித்துள்ளன. இது தொழிலாளர்களின் நடமாட்ட சுதந்திரத்தைப் பறிப்பதோடு, போர்க்காலச் சூழலில் அவர்கள் தாயகம் திரும்புவதைத் தடுக்கும் ஆயுதமாகவும் முதலாளிகளால் பயன்படுத்தப்படுகிறது.
சுமார் ஒரு கோடி இந்தியர்களின், குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தாக்குதல்கள் அதிகரித்து வரும் இக்கட்டான சூழலில், இந்திய அரசு தனது குடிமக்களைப் பாதுகாக்க வெறும் மீட்பு நடவடிக்கைகளை (Evacuation Operations) மட்டும் மேற்கொள்வது போதாது. அவர்களின் அடிமைத்தனத்திற்கு மூலக் காரணமாக இருக்கும் 'கஃபாலா' முறையைத் தூதரக ரீதியாகத் தகர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது சார்ந்த பணிகளை ஒன்றிய அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.