முந்தய பக்கம்

காடு - (முனைவர் கடவூர் மணிமாறன்)

20 Jun 2026, 9:07 pm
காடு  - (முனைவர் கடவூர் மணிமாறன்)

காடு - (முனைவர் கடவூர் மணிமாறன்)

ஊரின் ஒதுக்குப் புறங்களில் உயர்ந்து நிற்கும் காடுகள் பாரில் எங்கும் பார்க்கலாம் பயன்கள் நமக்கு வழங்குமே!

மரங்கள் செடிகள் கொடிகளும் மனம்போல் ஓங்கித் திகழுமே!

இரவும் பகலும் உயிரினம் இன்ப ஆற்றில் குளிக்குமே! சிங்கம் புலிகள் கரடிகள் சீறும் பாம்பு முயல்களும் எங்கும் திரியக் காணலாம் இனிய தோழமை கொள்ளுமே! பாக்கு மரங்கள் மா பலா பனையின் அளவு உயர்ந்துள தேக்கு சந்தன மரங்களும் செல்வம் கொழிக்கச் செய்யுமே! அருவி வீழும் அழகைப்பார் அதிலே குளிக்கும் மக்கள்பார்!

குருவி கிளிகள் புறாக்களும் கூடும் கொள்கைக் கூட்டமே! காட்டை அழிக்கும் கயவரை நாட்டை விட்டே துரத்துவோம்! காட்டில் வாழும் மக்களின் காவல் வேலியாய் இருப்போமே!

Share
FacebookXWhatsAppTelegram