தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடையநல்லூருக்கு, பாதாள சாக்கடை திட்டம் வேண்டும்: அரசுக்கு தி.மு.இராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை மனு

28 Jun 2026, 11:44 pm
கடையநல்லூருக்கு, பாதாள சாக்கடை திட்டம் வேண்டும்: அரசுக்கு தி.மு.இராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை மனு
<p><strong>கடையநல்லூருக்கு, பாதாள சாக்கடை திட்டம் வேண்டும்: அரசுக்கு தி.மு.இராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை மனு</strong></p><p>​தென்காசி, ஜூன் 28- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அங்கு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் முதலமைச்சரின் தனிச் செயலாளருக்கு எம்எல்ஏ தி.மு.இராசேந்திரன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவின் விவரம் வருமாறு:​தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் நகரில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசித்து வருகின்றனர். ​கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், இப்பகுதியில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருந்ததன் காரணமாக கடையநல்லூர் நகர மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். ​தற்போது வேகமாக வளர்ந்து வரும் கடையநல்லூர் நகரில், பொதுமக்களின் அன்றாடப் பிரச்சனையாக கழிவுநீர் மேலாண்மைப் பிரச்சனை உருவெடுத்துள்ளது. கடையநல்லூர் நகரின் சுகாதாரத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தவும், அங்குள்ள கழிவுநீர் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணவும் “பாதாள சாக்கடை திட்டத்தை” விரைந்து செயல்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.