அறிக்கை தயாரித்து, அரசிடமிருந்து நிதி ஆதாரம் பெற்று கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை நகராட்சிக் கூட்டத்தில் தலைவர் தகவல்
31 Oct 2026, 10:36 pm

அறிக்கை தயாரித்து, அரசிடமிருந்து நிதி ஆதாரம் பெற்று கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

நகராட்சிக் கூட்டத்தில் தலைவர் தகவல்

தென்காசி, அக். 30-தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.ஆணையாளர் சித்ரா சோனியா , பொறியாளர் முகைதீன் அப்துல் காதர்,மேலாளர் பேச்சிக்குமார், சுகாதார அலுவலர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் முதல் தீர்மானமாக கடையநல்லூர் நகராட்சியில் 30 ஆண்டுகாலத்திற்கு போதுமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைமேற்கொள்ள அதற்கான களப்பணி ஆற்றுவதற்கு நகராட்சியில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிர்வாக இயக்குநரின் ஒப்புதல் கோரி கடிதம் வைக்கப்பட்டது.அதில் கடையநல்லூர் நகராட்சிக்கு தினமும் 19.32 மில்லியன் லிட்டர் தாமிரவருணி குடிநீர் வழங்கும் வகையிலான புதிய குடிநீர் திட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், விரைவில் திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:கடையநல்லூர் நகராட்சியில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்கள் உள்ளன. 1973 முதல் கருப்பாநதி திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் குடிநீர்தினமும் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில்,2003 ஆம் ஆண்டு தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம் கடையநல்லூரில் செயல்பாட்டிற்கு வந்தது. இவ்விரண்டு திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 68 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால் போதிய தண்ணீர் இன்மையாலும், மின் தடை உள்ளிட்ட காரணங்களாலும்,பகிர்மானக் குழாய்களின் சீரற்ற நிலையினாலும் குறிப்பிட்ட அளவு குடிநீர் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து கடையநல்லூர் நகராட்சியில் உள்ள 33 வார்டு பகுதிகளிலும் தினமும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் உள்ளிட்டோரை தலைமை செயலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தேன்.

இதைத்தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்குத் தேவையான கள ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடையநல்லூர் நகராட்சியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப இத்திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 2059 ஆம் ஆண்டில் தினமும் 19.32 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் புதிய கூட்டுக்குடிநீர் அபிவிருத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு போதிய குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக கள ஆய்வினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக முன்கட்டணத் தொகையாக ரூ.5 லட்சத்தை செலுத்தவும் நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் தமிழ்நாடு அரசிடமிருந்து போதுமான நிதி ஆதாரம் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்கள் பிரியதர்ஷினி, இளங்கோ, உதவி நிர்வாகப் பொறியாளர்கள் ஜெயசெல்வி, அர்ஜுன், உதவிப் பொறியாளர் ஐஸ்வர்யா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.இப்புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் நிலையில் 30 ஆண்டுகள் குடிநீர் விநியோகத்தில் எவ்வித பிரச்சனையும் எழாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.