தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேக்கரையில் கூடுதல் பேருந்துகளை இயக்கிடுக! கடையநல்லூர் எம்எல்ஏவிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு

8 Oct 2026, 10:54 pm
மேக்கரையில் கூடுதல் பேருந்துகளை இயக்கிடுக! கடையநல்லூர் எம்எல்ஏவிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு
<p><strong>மேக்கரையில் கூடுதல் பேருந்துகளை இயக்கிடுக! கடையநல்லூர் எம்எல்ஏவிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு</strong></p><p>தென்காசி, அக்.08-விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செங்கோட்டை தாலுகாக்குழு சார்பில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.ராஜேந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p><p>அந்த மனுவில், மேக்கரை பகுதியில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் கூடுதல் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். காலங்கரை பகுதியில்நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜகோபால், தாலுகா தலைவர் சின்னச்சாமி,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.