தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடையத்தில் நிலையத்திற்குள் வராத பேருந்துகள் நிறுத்தம் அறியாமல் மக்கள் பரிதவிப்பு

1 Jun 2026, 10:53 pm
கடையத்தில் நிலையத்திற்குள் வராத பேருந்துகள்  நிறுத்தம் அறியாமல் மக்கள் பரிதவிப்பு
<p><strong>கடையத்தில் நிலையத்திற்குள் வராத பேருந்துகள் நிறுத்தம் அறியாமல் மக்கள் பரிதவிப்பு</strong></p><p>கடையம், ஜூன் 1- தென்காசி மாவட்டம், கடையம் பேருந்து நிலை யத்திற்குள் வராமலேயே தொலைதூர பேருந்து கள் சென்று விடுவதால் பயணிகள் பேருந்து நிறுத்தம் குறித்த குழப்பத்தால் பரிதவிக்கின்றனர். தென்காசி மாவட்டம் கடையம் பேருந்து நிலை யத்திற்குள் மதுரை, தேனி, குமுளி போன்ற தொலைதூர பேருந்துகள் நாகர்கோயிலி லிருந்து தென்காசி செல்லும் பேருந்துகள் உள்பட பேருந்து நிலையத்திற்குள் வராமலேயே சென்று விடுவ தால் இதையறியாமல் பேரு ந்திற்காக பேருந்து நிலை யத்திற்குள் காத்திருக் கும் பயணிகள் பேருந்தை தவறவிட்டு ஏமாற்றமடை கின்றனர். மேலும், கடையத்தை சுற்றியுள்ள பொதுமக்களும் வெளியூர்களில் உயர் கல்வி பயிலும் மாணவ மாண வியரும் வியாபாரிகளும் தென்காசி சென்று தொடர் வண்டியிலோ அல்லது பேருந்துகள் மூலமோ ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு கல்வி மற்றும் தொழில் நிமித்தம் செல்ல கடையத்திலிருந்து தென்காசி செல்ல காத்தி ருக்கும் பயணிகள் இதனால் பெரும் அவதியடைகின்ற னர். இதுபோன்ற சூழல்க ளில் பலநேரங்களில் கடை யத்திலிருந்து தென்காசி செல்லும் பேருந்துகளை தவற விடும் பயணிகள் தென் காசியிலிருந்து அடுத்து இவர்கள் செல்ல வேண்டிய முன்பதிவு செய்துள்ள தொடர்வண்டியையோ பெருநகரங்களுக்கு செல்லும் பேருந்துகளையோ தவறவிடும் சூழலும் உள்ளது. இதனால் கடை யம் பகுதி மக்களுக்கு முன் பதிவு செய்த பணமும் திரும்ப கிடைக்காமல் நஷ் டப்பட்டு அவர்களின் பயண மும் கேள்விக் குறியாகிறது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் காத்திருப்பதா அல்லது சாலையில் காத்திருப்பதா என புரியாமல் பரிதவிக்கின் றனர். மேலும், கடையத்தின் மிக குறுகிய சாலையில் தொலைதூர பேருந்துகளை நிறுத்தி ஆட்களை ஏற்றுவ தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகனங்க ளிலிருந்து வெளியேறும் அதிக புகையினால் சுற்றுச் சூழலும் மாசுபடுகிறது. இத னால் அப்பகுதி வியாபாரி களும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளா கின்றனர். எனவே, தென்காசி, வள்ளியூர், நாகர்கோயில் ஆகிய பணிமனைகளின் போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சினை யில் தலையிட்டு பேருந்து நிலையத்திற்குள் மட்டுமே நிறுத்தி ஆட்களை ஏற்ற வேண்டுமென மேற் கூறிய தொலைதூர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்து னர்களுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.