முந்தய பக்கம்

கடலம்மா...! - தரகம்பட்டி க.சண்முக சிதம்பரம்

18 Jul 2026, 10:07 pm
கடலம்மா...! -  தரகம்பட்டி க.சண்முக சிதம்பரம்
<p><strong>கடலம்மா...! - தரகம்பட்டி க.சண்முக சிதம்பரம்</strong></p><p><strong>கடலம்மா...! - தரகம்பட்டி க.சண்முக சிதம்பரம்</strong>– இந்த உலகில் நீண்ட பரப்பம்மா! ​அலையாய் எழுந்தே ஆர்ப்பரிப்பாய் – எம்மை அழைத்தே நனைத்து மகிழ்விப்பாய்! வலையை வீசி மீன்பிடிப்பார் – வாரி வளங்களைத் தந்து நீகாப்பாய்! ​உப்பை நீயும் உவந்தளிப்பாய் – இந்த உலகுக் கெல்லாம் உணவளிப்பாய்! சிப்பி நண்டு நத்தைகளும் – உன்னுள் சிறந்து வாழ இடங்கொடுப்பாய்! ​முத்து பவளம் வழங்கிடுவாய் – மண்ணில் முந்நீ ராக உருவெடுப்பாய்! கத்தும் கடலே என்றழைப்பார் – வீசும் காற்றால் மனத்தைக் குளிர்விப்பாய்! ​ஆழம் மிகவும் கொண்டிருப்பாய் – என்றும் அல்லும் பகலும் விழித்திருப்பாய்! கால மெல்லாம் பொருள்தருவாய் – நாளும் கலங்கள் செல்லத் துணைநிற்பாய்! ​விரிந்து பரந்து விளங்கிடுவாய் – எம்மை வியப்பில் நாளும் ஆழ்த்துவாய்! கரிய மேகம் திரண்டெழவே – புயல் காற்றால் மழையைத் தந்திடுவாய்! ​பிறர்க்கும் உதவும் குணத்தாலே – நல்ல பெருமை பெற்றாய் கடலம்மா! மறவா துன்னை எந்நாளும் – உலகோர் மனங்களில் என்றும் போற்றுவரே!</p>
Share
FacebookXWhatsAppTelegram