அறிவியலை சமூக மாற்றத்திற்கான கருவியாக பார்த்தவர் ஐன்ஸ்டீன்
11 Jan 2026, 7:00 am
<p>சென்னை, ஜன. 11 - அறிவியலை சமூக மாற்றத்திற்கான கருவியாக பார்த்தவர் ஐன்ஸ்டீன் என்று புத்த வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.கனக ராஜ் கூறியுள்ளார். சிபிஎம் மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம் எழுதி பாரதி புத்தகாலயம் பதித்துள்ள ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் ஒரு புதிர் விளக்கம் பெறுகிறது எனும் நூல் வெளியீட்டு விழா மற்றும் உரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (ஜன.10) சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்றது. நூலை சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் கே.கனக ராஜ் வெளியிட கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். அப்போது கே.கனகராஜ் பேசியதாவது; இஸ்ரேல் நாட்டின் அதிபர் பதவிஐன்ஸ்டீனை தேடி வந்தபோதும், பாலஸ் தீன மக்கள் மீதான ஒடுக்கு முறை மற்றும் இனவாதப் போக்கு காரணமாக அதனை நிராகரித்தார். ஐன்ஸ்டீனின் அரசியலை நூலாசிரியர் விஎம்எஸ் இந்நூலில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார். ஐன்ஸ்டீ னின் கடிதங்கள் வெறும் செய்திகளை மட்டுமல்லாது, சமூகம் மற்றும் தன் மீதான விமர்சனங்களையும், மனித குலத்தின் மீதான அன்பை யும் வெளிப்படுத்தினார்.</p>
<p>பிகாசோ, சார்லி சாப்ளின் போன்ற மேதைகளைப் போலவே, ஐன்ஸ்டீனும் பேரழிவுகளுக்கு மத்தியில் மனிதகுலத்தின் மீதான காதலைத் தனது கண்டு பிடிப்புகள் வழி வெளிப்ப டுத்தினார். ஒரு புத்தகத்தில் 10 சதவீத புதிய செய்திகள் இருந்தாலே அது சிறந்த நூல். தோழர் விஎம்எஸ்-ன் இந்த நூல் மனிதகுலம் முழுமையடைவதை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக உள்ளது. விஎம்எஸ்-ன் வகுப்புகள் மற்றும் எழுத்துகள் எப்போதும் பதில்களைத் தருவதை விட, பதில்களைத் தேடுவதற்கான சரியான கேள்விகளை மனதில் உரு வாக்கும் வல்லமை கொண்டவை. அறிவியலை வெறும் தொழில்நுட்பமாக பார்க்காமல், சமூக மாற்றத் திற்கான கருவியாகப் பார்த்தவர் ஐன்ஸ்டீன். இந்த நூல் இன்றைய காலகட் டத்தில் அனைவரும் வாசிக்க வேண்டும். வி.எம்.எஸ் தொடர்ந்து எழுத வேண்டும் இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார். நூலாசிரியர் வே.மீனாட்சி சுந்தரம் ஏற்புரையாற்றினார், கட்சியின் எழும்பூர் பகுதிச் செயலாளர் வெ.ஆறுமுகம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வட சென்னை மாவட்ட செயலா ளர் எஸ்.பாக்கியலட்சுமி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், வடசென்னை மாவட்ட செய லாளர் ஜி.நித்யராஜ், மாண வர் சங்க தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் பி.எஸ்.ராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.</p>
