முந்தய பக்கம்

கேத்தாண்டபட்டியில் விதை உற்பத்தி அலுவலகம் க.தேவராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல்

6 Feb 2026, 5:17 pm
கேத்தாண்டபட்டியில் விதை உற்பத்தி அலுவலகம் க.தேவராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல்
<p><strong>கேத்தாண்டபட்டியில் விதை உற்பத்தி அலுவலகம் க.தேவராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல்</strong></p> <p>திருப்பத்தூர், பிப். 6- ஜோலார்பேட்டை ஒன்றியம், நாட்றம்பள்ளி தாலுக்கா கேத்தாண்டபட்டி ஊராட்சி சின்னூர் கிராமத்தில், ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய வேளாண்மை விதை உற்பத்தி பிரிவு அலுவலகக் கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. &nbsp;வேளாண்மை உறுப்பினர் மோகன் சகாயராஜ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் பங்கேற்றுப் பணியைத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஒன்றிய அவைத் தலைவர் கோபி நாதன், கிழக்கு ஒன்றிய கவுன்சிலர் க.உமா கன்ரங்கம், எழிலரசிகுமார், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருப்பதி, ஜெயலட்சுமி சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குநர் நவீன் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram