புதுச்சேரியில் கே.பாலகிருஷ்ணன் இறுதிக் கட்டத் தீவிரப் பிரச்சாரம்
7 Apr 2026, 5:38 pm
<p><strong>புதுச்சேரியில் கே.பாலகிருஷ்ணன் இறுதிக் கட்டத் தீவிரப் பிரச்சாரம்</strong></p>
<p>புதுச்சேரி, ஏப்.7- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 அன்று நடை பெற உள்ள நிலையில், செவ்வாய்க் கிழமை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதனையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்டத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை தொகுதிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் ராஜாங்கம் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு ஆதரவாக, ‘சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்’ சின்னத்திற்கு வாக்கு கள் கோரி, திறந்த வாகனத்தில் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். திருபுவனை தொகுதி திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட செல்லிப்பட்டில் தொடங்கிய வாக்கு சேகரிப்புக்கு, கட்சியின் மண்ணாடிப்பட்டு கமிட்டிச் செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். வேட்பாளர் தட்சிணா மூர்த்தியுடன் திறந்த வாகனத்தில் சென்ற கே.பாலகிருஷ்ணன், தொகுதி முழுவதும் கிராமம் கிராம மாகச் சென்று வாக்குச் சேகரித்தார். மாநிலச் செயலாளர் ராமச்சந்தி ரன், மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் சுதா, தமிழ்ச்செல்வன், சீனி வாசன், மாநிலக்குழு உறுப்பினர் கள் சங்கர், மதிவாணன், இளவரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வம்புப்பட்டு, சோரப்பட்டு, வாதா னூர், பி.எஸ். பாளையம், சன்னியா சிகுப்பம், கலிதீர்த்தாள்குப்பம், திருவாண்டார்கோவில் வழியாகச் சென்ற பிரச்சாரம் இறுதியாக மதகடிப்பட்டில் நிறைவடைந்தது. ஏராளமான கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் செங்கொடி ஏந்தி இருசக்கர வாகனங்களில் பேரணி யாகச் சென்றனர். லாஸ்பேட்டை தொகுதி லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பெத்துசெட்டிப்பேட்டை யில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு, உழவர்கரை நகரக்கமிட்டி செய லாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். வேட்பாளர் ராஜாங்கத்துடன் திறந்த வாகனத்தில் சென்ற கே.பால கிருஷ்ணன், ஐயனார்கோவில், நெசவாளர் நகர், செல்லப்பெரு மாள்பேட், சாந்தி நகர், அசோக் நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா, மாநிலக்குழு உறுப்பி னர்கள் ராமசாமி, மாரிமுத்து, சர வணன், ஆனந்த், சஞ்சய் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அரி கிருஷ்ணன், சுரேஷ், மணிமாறன், நிலவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக வேட்பாளர் ராஜாங்கம் சைக்கிளில் சென்று வாக்குச் சேகரித்துத் தனது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.</p>
