விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக கி.வீரமணி பிரச்சாரம்
9 Apr 2026, 5:30 am

விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக கி.வீரமணி பிரச்சாரம்

விருதுநகரில் உள்ள அம்மன்பட்டி பகுதியில் மதியச் சந்தை முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: 5 ஆண்டு சாதனைகளைச் செய்து காட்டி மக்களிடம் வாக்கு கேட்கிறது. மிகப்பெரிய அளவிற்கு சாதனை செய்துள்ளது. பெண்களின் உரிமைகளை மதித்த ஆட்சி திமுக ஆட்சி.

பிரதமர் மோடி ஆட்சி கொடுத்தார். ஆனால், கேஸ் சிலிண்டர் தரவில்லை. இதனால் பெண்கள் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிமுகவினர், பாஜகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்காது. தமிழக முதல்வர், பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வழங்குகிறார்.

பள்ளி மாணவர்களின் பசியைப் போக்க காலை உணவுத் திட்டத்தை வழங்கினார் முதல்வர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 8 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளார். அருப்புக்கோட்டையிலுள்ள ஸ்ரீரமணா கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே, திமுக கூட்டணியை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.