புதிய கட்சியை தொடங்கிய தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகள்!
25 Apr 2026, 12:55 pm

புதிய கட்சியைத் தொடங்கினார் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா.

தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் (KCR)-இன் மகள் கவிதா, "கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில்" ஈடுபட்டதாகக் கூறி பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இடைநீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, தான் தலைமை வகிக்கும் 'தெலங்கானா ஜாக்ருதி' (Telangana Jagruthi) என்ற கலாச்சார அமைப்பின் வாயிலாக, பொதுமக்களின் பிரச்சினைகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். புதிய கட்சிக்கு 'தெலுங்கானா ராஷ்டிர சேனா' என்று பெயரிட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் முன்னதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்று இருந்தது குறிப்பிடத்தக்கது.