தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைதிக்கு எதிரானது ஏகாதிபத்தியம்! ஏகாதிபத்திய எதிர்ப்பு நிகழ்வில் கே.கனகராஜ் பேச்சு

17 Jun 2026, 12:16 am
அமைதிக்கு எதிரானது ஏகாதிபத்தியம்! ஏகாதிபத்திய எதிர்ப்பு நிகழ்வில் கே.கனகராஜ் பேச்சு

அமைதிக்கு எதிரானது ஏகாதிபத்தியம்! ஏகாதிபத்திய எதிர்ப்பு நிகழ்வில் கே.கனகராஜ் பேச்சு

​​​​​​​சென்னை, ஜூன் 16 - ஏகாதிபத்தியம் அமைதிக்கு எதிரா னது. அரசியல், பொருளாதாரம், ராணுவ என மும்முனை தாக்குதலை நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கன கராஜ் கூறினார்.

புரட்சியாளர் சேகுவேரா பிறந்த நாளையொட்டி திங்களன்று (ஜூன் 15) சைதாப்பேட்டையில் ‘கியூபா ஆதரவு - ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்’ நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சேகுவேரா முகம் அணிந்து, குழந்தை கள் ஊர்வலமாக புரட்சி சுடரை ஏந்தி வந்தனர்.

அதை மூத்த தலைவர் அன்பு முத்து பெற்றுக் கொண்டார். மாற்று ஊடக மையத்தின் கலை நிகழ்வுகள், காம்ரேட் கேங்ஸ்டாவின் ராப் பாடல்களுடன் தொடங்கிய இந்நிகழ்வில், இயக்குநர் ராஜூ முரு கன் ஏகாதிபத்திய எதிர்ப்பு உறுதி மொழியை வாசிக்க, அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.

கே.கனகராஜ் இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகை யில், உலகின் பல்வேறு நாடுகளை தாக்கும் அமெரிக்காவிற்கு அருகில் நின்று கியூபா மார்க்சியத்தை உயர்த்தி பிடிக்கிறது. அமைதி, அன்பை விரும்பு கிற ஒவ்வொருவரும் கியூபாவை ஆத ரிக்க வேண்டும் என்றார்.

அமெரிக்காவைவிட அதிக மருத்து வர்கள், ஆசிரியர்களை கியூபா கொண்டுள்ளது. பீகாரில் பிளேக் நோய் பரவிய போது இந்தியா தனது தேவையை விட 100 மடங்கு அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்தது. ஆனால், உலகில் எங்கு இயற்கை பேரிடர் நிகழ்ந்தாலும் அங்கே தனது மருத்து வக்குழுக்களை கட்டணமின்றி அனுப்பு கிறது கியூபா. அமெரிக்கா புயலால் பாதிக்கப் பட்டபோது கியூபா தனது மருத்து வக்குழுவை அனுப்பியது.

அத்தகைய நாட்டை வெனிசூலாவை போன்று தாக்குவோம் என்கிறது அமெரிக்கா. முதலாளித்துவத்தின் தலைமை ஏகாதிபத்தியம். முதலாளித்துவ நாடு கள் ஏகாதிபத்தியத்தை விரும்பு கின்றன. மூலதனத்தின் அடிப்படை யான குணம்சம் சுரண்டல்.

அரசியல், பொருளாதாரம், ராணுவ என மும்முனை தாக்குதலை ஏகாதிபத்தி யம் நடத்தி வருகிறது. ஏகாதிபத்தியம் நம்முடைய அன்றாட நிகழ்வுகளில் தலையீடு செய்கிறது. வரி, போர், அரசி யல் அடாவடி மூலம் மக்களை சுரண்டு கிறது. சோவியத் யூனியன், சோசலிச முகாம் இருந்தபோது அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளால் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமிக்க முடியவில்லை.

ஏகாதிபத்தியம் என்பது ஜனநாயகம், மனித உயிர்கள், அமை திக்கு எதிரானது. சோசலிசம் ஜிந்தா பாத் எனும்போதே ஏகாதிபத்தியம் ஒழிக என்பதையும் ஓங்கி ஒலிக்கிறோம். அது உலகின் குரலாக மாற வேண்டும் என்றும் கனகராஜ் கூறினார். ஜா.மாதவராஜ் எழுத்தாளர் ஜா.மாதவராஜ் உரை யாற்றுகையில், “39வயதில் கொல்லப் பட்ட சேகுவேரா, எப்போதும் போராட்ட குணம் நிறைந்தவராக காட்சியளிக் கிறார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை எதிர்த்து அந்நாட்டு மக்கள் சேகுவேராவின் படத்தை ஏந்தி போராடு கின்றனர். கியூபாவிற்கு ஆதரவு தெரிவித்து பிரிட்டனில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் சேகுவேராவை ஏந்தி போராடுகின்ற னர். இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதாக கட்சி நடத்து போராட்டத்தி லும் சே இருக்கிறார். எங்கும் சே நிறைந் திருக்கிறார். அது அவரது பிம்பத்தி னால் அல்ல, செயல்தான் சே. அதனால் அவர் நினைவு கூறப்படுகிறார்” என்றார்.

சேகுவேராவின் ஆளுமை குறித்த பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூர்ந்த அவர், “சேகுவேராவை பிம்பமாக சித்த ரிக்க முதலாளித்துவம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது

. அதையும் மீறி சேகுவேரா போராட்ட பண்பாட்டின் அடையாளமாக திகழ்கி றார். தன்னை உலகம் முழுமைக்கும் சொந்தக்காரனாக பாவித்துக் கொண்டார். அதனால்தான் எங்கு போராட்டம் நடந்தாலும் சேகுவேரா இருக்கிறார்” என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்விற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை தாங்கினார். சைதாப் பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்க டேசன் நன்றி கூறினார். முன்னதாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா வரவேற்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.